Where does investment in your business stagnate ?உங்கள் தொழிலில் முதலீடு எங்கெல்லாம் முடங்குகிறது?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் உங்கள் தொழிலில் முதலீடு எங்கெல்லாம் முடங்குகிறது? மேலும் அதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
வழக்கம் போல் இந்த பதிவினை சிறுகதைகளும் தொங்க போகிறேன். வாருங்கள் கடைக்குள்ளும் போகலாம்.
சொக்கலிங்கம் மற்றும் சுந்தரம் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்தே ஒரு நிறுவனத்தில் சிலகாலம் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து இருவரும் தனித்தனியே ஒரே மாதிரியான இரண்டு தொழில்களை தொடங்குகிறார்கள்.
சில ஆண்டுகள் செல்கின்றன தோராயமாக 5 ஆண்டுகள் கழித்து. சொக்கலிங்கம் தொடங்கிய தொழிலை மூடிவிட்டு மறுபடியும் வேறு ஒரு இடத்திற்கு வேலைக்கு செல்கிறார். சுந்தரம் தன் தொடங்கிய தொழிலை சிறப்பாக நடத்தி 10 நபர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறார்.
இருவரும் தன் தொழிலில் செய்தது என்ன? ஏன் சொக்கலிங்கம் தொழிலை மூடினார்? சுந்தரம் தன் தொழிலை எவ்வாறு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்?
இவ்வாறு இருவரும் வேறு வேறு வழியில் பயணிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது தொழில் தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான மறு முதலீட்டு தொகை தொழிலில் போதிய அளவு இருக்க வேண்டும்.
இவராக தொழிலின் மறு முதலீட்டு தொகை குறைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன சொக்கலிங்கமும் சுந்தரமும் இதை எவ்வாறு கையாண்டனர் என்று சற்று விரிவாகவும் விளக்கமாகவும் இங்கு பார்ப்போம்.
அவையாவன
01. கட்டுப்பாடு இல்லாத கடன் விற்பனை.
02. தேவையற்ற முதலீட்டு செலவினங்கள்.
03. விற்பனையாகாத பொருட்களின் குவிப்பு .
04. லாபம் இல்லாத பொருட்களை விற்பது.
05. தேவையற்ற வங்கி கடன்கள் மற்றும் அதன் மீதான வட்டி.
06. தேவையற்ற நடப்பு செலவினங்கள்.
07. தரையிறங்கும் செலவை கண்டுபிடிப்பதில் பல குளறுபடிகள்.
08. நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலை.
09. சரியான மேலாண்மை இல்லாத சூழ்நிலை.
10. இருப்புநிலை குறிப்பை கணக்கிட தவறுதல்.
இவ்வாறாக பல மேலன்மை கூற்றையும் தகவல்களையும் கூற்றை பார்க்க விருக்கிறோம்.
இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.
01. அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக
சொக்கலிங்கம்: தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு இல்லாத கடன் விற்பனை செய்தார்.
சுந்தரம்: தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு திட்டமிடப்பட்ட கடன் விற்பனையை செய்தார் .
02. அதிகப்படியான முதலீட்டுத் தொகை.
சொக்கலிங்கம்: தொழில் அதிகப்படியான முதலீடு மட்டுமே தொழிலை வளர்க்கும் என்ற எண்ணத்துடன் தொழில் முதலீட்டை கூட்டாளிகளிடம் இருந்து பெறுவது மற்றும் வங்கி கடனாக பெறுவது என தேவையற்ற முதலீட்டு செலவினங்களை செய்தார்.
சுந்தரம்: மாதாந்திர விற்பனை அளவை கண்டுபிடித்து அந்தளவிற்கு போதுமான முதலீட்டை செய்து தேவையற்ற தொழில் முதலீட்டை தவிர்த்து தொழிலை நடத்தி வந்தார்.
03. விற்பனையாகாத பொருட்கள் .
சொக்கலிங்கம்: தனது தொழிலில் சுப்பிள்ளையாருடன் கொண்ட அதிக ஈடுபாட்டின் காரணமாக தொழிலின் விற்பனையாகாத பொருட்களின் கொள்முதலை அதிகமாக செய்து தொழிலின் அதிகப்படியான முதலீட்டை முடங்க செய்துள்ளார்.
சுந்தரம்: தனது தொழில் விற்பனையாக கூடிய பொருட்கள் மட்டும் எவை எவை என கண்டுபிடித்து அவற்றின் இருப்பு கேட்க மட்டுமே பொருட்களை கொள்முதல் செய்து வந்தார்.
04. லாபம் இல்லாத பொருட்களை விற்பது.
சொக்கலிங்கம்: ஒரு சில காரணங்கள் தவிர்த்து லாபம் இல்லாத பொருட்களை எந்த நிறுவனமும் விற்பனை செய்வதை விரும்புவதில்லை. தேவையற்ற காரணங்களுக்காக லாபம் இல்லாத பொருட்களை இவரை அதிகம் விற்கத் தொடங்கினார்.
சுந்தரம்: தனது சப்ளையர் இடம் லாபம் இல்லாத பொருள்களை இலவசமாக அல்லது பதிலியாக பெறுவது மற்றும் லாபம் இல்லாத பொருட்களை விற்பதை அறவே தவிர்த்தார்.
05. வங்கி கடன்கள் மற்றும் அதன் வட்டி.
சொக்கலிங்கம்: முதலீட்டை அதிகப்படுத்த தொழிலில் தேவையற்ற வங்கிக்கடன் மற்றும் அதற்கு உண்டான வட்டி ஆனது தொழிலின் மறு முதலீட்டு தொகை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
சுந்தரம்: இவர் தேவையற்ற தொழில் முதலீட்டையும், அதற்கு உண்டான வங்கி கடன் மற்றும் அதன் வட்டி போன்றவற்றை அறவே தவிர்த்தார்.
06. தேவையற்ற நடப்பு செலவினங்கள்.
சொக்கலிங்கம்:தன் தொழிலை பெரிய அளவில் தொடங்கி தேவையற்ற நடப்பு செலவினங்களை அதிகமாக செய்து வந்தார். உதாரணமாக வேலையாட்களுக்கு அதிகப்படியான சம்பளம், பெரிய அளவிலான கடை, அதிகப்படியான விளம்பர செலவினங்கள், மின்சார செலவினங்கள், கடனின் மீதான வட்டி,
சுந்தரம்: தன் தொழிலின் மீதான செலவினங்களை போதுமான அளவு கணக்கிட்டு செலவினங்களை செய்துவந்தார்.
07. தரையிறங்கும் செலவை கண்டுபிடிப்பதில் பல குளறுபடிகள்.
சொக்கலிங்கம்: அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் தரையிறங்கும செலவை கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலான காரியமாக உள்ளது. இந்த தரையிறங்கு செலவின் அடிப்படையிலேயே நிறுவனத்தின் லாபம் அமைகிறது. இவராக சொக்கலிங்கம் தனது நிறுவனத்தின் தலைவருக்கு செலவை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காண்பித்து வந்தார். இதனால் இவர் தரையிறங்கு செலவிற்கு குறைவாகவே பொருளை விற்று வந்தார். இந்த காரணங்கள் அனைத்தும் அவர் தொழிலை மூடுவதற்கு சாதகமாக அமைந்தன.
சுந்தரம்: தன் தொழிலின் ஒவ்வொரு பொருளுக்கான தரை இறங்கும் செலவை உடனுக்குடன் கண்டுபிடித்து உடனுக்குடன் அதனுடைய லாபத்தையும் நிர்ணயித்து தொழில் நடத்தி வந்தார். இதன் காரணமாக இவருக்கு பொருள்களின் விற்பனையானது சரியாக தெரிய வந்துள்ளது.
08. நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலை.
சொக்கலிங்கம்: ஒவ்வொரு தொழிலும் தனது விற்பனைப் பொருள்களின் நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலையை கண்டுபிடிப்பது என்பது சற்று கடினமான காரியமாகவே இருந்துவருகிறது. இவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை சொக்கலிங்கம் அறிந்திருக்கவில்லை.
சுந்தரம்: தொழிலில் நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலையை நன்றாக அறிந்து செயல் பட்டதன் காரணமாக சுந்தரம் இன்றளவும் அந்த தொழிலில் நிலைத்து நிற்கிறார்.
09. சரியான மேலாண்மை இல்லாத சூழ்நிலை.
சொக்கலிங்கம்: ஆக மொத்தம் கூட்டி கழித்து பார்க்கும்போது சொக்கலிங்கம் தன் தொழில்லின் மேலாண்மையை சரிவர செய்யாமல் இருந்ததன் காரணமாக இவர் தன் தொழிலில் நடத்தை சந்தித்தார்.
சுந்தரம்: சுந்தரம் தனது தொழில் மேலாண்மையை சரிவர செய்ததன் காரணமாக இன்றளவும் தன் தொழிலில் நிலைத்து நிற்கிறார்.
10. இருப்புநிலை குறிப்பை கணக்கிட தவறுதல்.
சொக்கலிங்கம்: நான் முந்தைய பதிவில் கூறியது போல சொக்கலிங்கம் ஆனவர் மாதத்திற்கு ஒரு முறைதான் தொழிலின் இருப்புநிலைக் குறிப்பு சரி பார்ப்பதில் பல தவறுகள் செய்து உள்ளார். அல்லது இருப்புநிலை குறிப்பில் சரிபார்ப்பது எப்படி என்பதை தெரியாமலேயே இருந்திருப்பார்.
சுந்தரம்: சுந்தரம் மாதம் மாதம் அல்லது தினந்தோறும் தன் தொழிலின் இருப்புநிலை குறிப்பை ஆராய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட்டதன் காரணமாக தன் தொழிலைச் சீரும் சிறப்புமாக இன்றளவும் செய்து வருகிறார்.
மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக