how many days stock layed in your business without sales ?தொழிலின் விற்பனைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு வந்து அதிகப்படியாக எத்தனை நாள்கள் தேங்கி இருக்க வேண்டும்?

Story.61. how many days stock layed in your business without sales ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் ஒரு தொழிலின் விற்பனைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு வந்து அதிகப்படியாக எத்தனை நாள்கள் தேங்கி இருக்க வேண்டும்?  மேலும் இவற்றை எவ்வாறுமேலாண்மை வேண்டும்?   என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

வழக்கம்போல் நான் சொல்ல வந்த விளக்கத்தை ஒரு சிறு கதையுடன் கூடிய  உதாரணத்துடன் எடுத்து சொல்ல விரும்புகிறேன். வாருங்கள் கதைக்கு உள்ளும் பதிவுக்கு உள்ளும் போகலாம்.

உதாரணமாக:-  தொழில் முனைவோர் ஒருவர் ஒரு லட்சம் மாதம் 10% வட்டியுடன் கடன் வாங்கி  அதை தன் தொழிலில் முதலீடு செய்து இரண்டு விற்பனை பொருட்களை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு பொருளின் பொருட்களின் கொள்முதல் விலை 50000, விற்பனை விலை 55000/ -  ஆகா வாங்கப்படும் இரண்டு பொருட்களையும் விற்றாலும் இதற்கு கிடைக்கக் கூடிய லாபம் 10000/-

முதல் மாதம் இவர் இரண்டு பொருட்களையும் விற்க முடியாத சூழ்நிலை உருவாகிறது.

இரண்டாவது மாதம் ஒரு பொருட்களை மட்டுமே விற்க கூடிய சூழ்நிலை உருவாகிறது.

மூன்றாவது மாதம் ஒரு பொருளை பணத்திற்காகவும் மற்றொரு பொருளை கடனுக்கும் விற்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.

முதல் மாதம்  வாங்கிய கடனுக்கான வட்டி 10, 000 + இரண்டாவது மாதம்  வாங்கிய கடனுக்கான வட்டி 10, 000 - விற்ற ஒரு பொருளுக்கான லாபம் 5000 + மூன்றாவது மாதம் வாங்கிய கடனுக்கான வட்டி10, 000 - விற்ற ஒரு பொருளுக்கான லாபம் 10, 000  ஆக மொத்தம் தொழிலில் இருந்து 15, 000 நட்டம் மட்டுமே கிடைத்தது.

அங்கு சற்று யோசித்தவர் செயல்பட்டிருந்தால் முதல் மாதத்திற்கு ஒரு பொருளையும்,  இரண்டாவது மாதத்திற்கு இன்னொரு பொருளையும்,  மூன்றாவது மாதத்திற்கு இரண்டு பொருளாகவும் வாங்கி விற்பனை செய்யும் சூழ்நிலையில். இவருக்கு ஒருவேளை லாபம் கிடைத்திருக்கலாம்.

இவராக துவக்கத்தில் உள்ள தொழிலோ அல்லது  நடைபெற்றுவரும் தொழிலுக்குத் தேவையான சரியான சரக்கு இருப்பை மட்டும் கையாள்வதன் மூலமாக தேவையற்ற வங்கிக் கடனையும் அதற்குண்டான வட்டியும் தவிர்க்க முடியும்.

தேவையற்ற செலவினங்களை தெருவிலிருந்து குறைத்துக் கொண்டாலே நிறுவனம் லாபத்தில் செல்லும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இவ்வாறாக நடத்தப்படும் தொழில் இருக்கும் பொருள்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்றுத் தீர வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாகும்,  எனவே தொழில் முனைவோர் அதற்கேற்றார்போல் பொருட்களை வாங்கி வைத்து வியாபாரம் செய்யும் பொழுது கணிசமான அளவு லாபத்தை தொழிலிலிருந்து எடுக்க முடியும் என்பது உண்மை.

மேலும்,
01. விற்பனைப் பொருட்களின் தேக்கம் என்றால் என்ன?

02. விற்பனைப் பொருள் தேக்கம் உருவாவதற்கான காரணம் என்ன?

03.தொழிலின் விற்பனைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு வந்து அதிகப்படியாக எத்தனை நாள்கள் தேங்கி இருக்க வேண்டும்?

04. விற்பனைப் பொருள் தேக்கத்திற்கும்  வங்கி கடன் வட்டி க்கும் உள்ள தொடர்பு என்ன?

05. விற்பனைப் பொருள் தேக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?

06. வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு விற்பனைப் பொருள் தேக்கம் எந்தளவுக்கு  சவாலாக உள்ளது?

07. தொழிலின் சரியான சரக்கு இருப்பை எவ்வாறு மேலாண்மை செய்வது?

என்பது போன்ற பல முக்கியமான விஷயங்கள் இங்கே பார்க்கிறோம்.

இதில் நாம் முதலாவதாக பார்க்க இருப்பது.

01. விற்பனைப் பொருட்களின் தேக்கம் என்றால் என்ன?

துவக்கத்தில் உள்ள தொழிலோ அல்லது ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிலோ, இலக்குகளை நிர்ணயித்து அதன் அடிப்படையில் நடைபெறும் தொழிலோ அல்லது இலக்கு  என்று எதுவும் இல்லாமல் நடைபெறும் தொழிலோ, தொழில் நிறுவனத்தின் விற்பனைப் பொருளோ அல்லது உற்பத்தி பொருளோ, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாக விற்பனையாகாமல் இருக்கும் பொருட்களை விற்பனை தேக்கம் என்று கூறலாம்.

02. விற்பனைப் பொருள் தேக்கம் உருவாவதற்கான  காரணம் என்ன?

விற்பனைப் பொருள் தேக்கம் அடைவதற்கான பல காரணங்கள் இருக்கின்றன அவற்றில் ஒரு சிலவற்றைக் கீழே அட்டவணைப்படுத்தி பார்ப்போம்.

02A. நடத்திவரும் தொழிலுக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயல்படாமல் இருப்பது.

02B. நடத்திவரும் தொழிலைப் பற்றிய போதிய அனுபவம் இல்லாமல் இருப்பது.

02C. விற்பனைக்கான ஆய்வறிக்கை தயாரிக்காமல் இருப்பது.

03D.  தொழிலில் விற்கப்படும் பொருட்களின் விற்பனை விலையில் மாறுபாடு.

02E. தொழிலில் கட்டுப்பாடற்ற போட்டியாளர்களின் பெருக்கம்.

02F. தொழிலில் தகுதியற்ற விற்பனைக்கான வேலையாட்கள்

02G. தொழில்முனைவோருக்கு  விற்பனையில் போதிய அனுபவ அறிவு இல்லாதது.

என்பது போன்ற பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.

03.தொழிலின் விற்பனைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு வந்து அதிகப்படியாக எத்தனை நாள்கள் தேங்கி இருக்க வேண்டும்?

தொழிலில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்

குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.

சராசரியாக எத்தனை நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.

அதிகப்படியாக எத்தனை நாட்கள் தங்கி இருக்க வேண்டும்

என்பதை பல வணிகவியல் சூத்திரங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

தொழில் முனைவர்கள் அனைவரும் இத்தகைய கூற்றை மிகவும் விளக்கமாக அறிவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

04. விற்பனைப் பொருள் தேக்கத்திற்கும்  வங்கி கடன் வட்டி க்கும் உள்ள தொடர்பு என்ன?

வட்டிக்கு கடன் வாங்கி நடக்கும் தொழில்கள் அனைத்தும் தொழிலில் விற்கப்படும் பொருட்களின் அளவை பொறுத்தே அந்தக் கடனில் இருந்து மீண்டு வர முடியுமா அல்லது வட்டிக்கு மேல் வட்டி பெருகி நட்டத்தில் செல்லுமா என்பதே அமையும்.

இந்த சூழ்நிலையில் விற்பனைக்காக வாங்கி வைத்த பொருட்கள் தொழில் நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்றுத் தீர்க்க வேண்டும் அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் வட்டி தொகை பெருகி நிறுவனம் நட்டத்தில் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

05. விற்பனைப் பொருள் தேக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?

பல்வகைப்பட்ட விற்பனையில் அனுபவம் கொண்ட ஒரு தொழில்முனைவோர் மட்டுமே விற்பனைப் பொருள்களின் தேக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

இவர்கள் விற்பனை மேலாண்மையில் சிறந்து சிறந்து விளங்கினால் மட்டுமே இத்தகைய தாக்கத்திலிருந்து அவர்கள் மீண்டு தொழிலை சிறப்பாக நடத்த முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

06. வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு விற்பனைப் பொருள் தேக்கம் எந்தளவுக்கு  சவாலாக உள்ளது?

தொழிலில் போதிய அனுபவம் இல்லாத புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு இத்தகைய விற்பனை தேகமானது மிகுந்த சவாலாக இருக்கிறது.

அவர்கள் கண்டிப்பாக தனது அனுபவ அறிவைப் பெற்று தொழில் தொடங்கினால் மட்டுமே இந்த சவாலை ஜெயித்து வெளிவர முடியும்.

07. தொழிலின் சரியான சரக்கு இருப்பை எவ்வாறு மேலாண்மை செய்வது?

மேற்சொன்ன  தொழில் பொருட்களின் ஏக்கத்தை எவ்வாறு கையாள வேண்டும்?  மேலும் அது தொடர்பான பல விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

👉முதல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள இணைப்பை தொடவும்..
https://m.facebook.com/groups/657919231463185?view=permalink&id=725568714698236&sfnsn=wiwspwa&extid=SlI2oUjXru6kFEzX 

🎯 இரண்டு மணி நேர இலவச தொழில் முனைவோர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழே  உள்ள விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பை தொடவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdYvus06_Wi-Fr5WM-X2XmHi6QMm3UFeUO7IQJMIvvngoQ6Yg/viewform

📢 🥁🥁 🥁🥁📢ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை Zoom App மூலம் நடைபெறும் இலவச தொழில் முனைவோர் மேலாண்மை முன்னுரை பயிற்சி வகுப்புகளுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6922347684?pwd=NkJObURmSjhmV3ROVVJEUW9FZWpnZz09

Meeting ID: 692 234 7684
Passcode: 123456

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Entrepreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungentrepreneurs.blogspot.com/?m=1

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?