How to manage your business stocks?தொழில்களின் சரக்கு இருப்பை எவ்வாறு மேலாண்மை செய்வது?

Story.58. How to manage your business stocks?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் தொழில்களின் சரக்கு இருப்பை எவ்வாறு மேலாண்மை செய்வது?    என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

வழக்கம்போல் ஒரு சிறுகதை உடன் நான் சொல்ல வந்த கூற்றை விளக்க உள்ளேன்.
வாருங்கள் கதைக்குள் போகலாம்.

ஒருவர் தனது டூவீலரில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் உறவினரை சென்று சந்திக்க உள்ளார் என்று வைத்துக்கொள்வோம். இதற்காக அவர் தன் தந்தையாரிடம் தனது டூவீலரில் பெட்ரோல் டேங்க் ஐ  முழுவதும் நிரப்புவதற்காக பணம் கேட்கிறார்.

மற்றுமொருவர் டூவீலரில் 500 கிலோ மீட்டர்கள் கொண்ட இடத்திற்கு வெகுதூரம் செல்ல முடிவெடுக்கிறார்.
இதற்காகவும் இவர் தன் தந்தையாரிடம் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்புவதற்கு மட்டுமே பணம் கேட்கிறார்.

இது எந்தளவிற்கு ஒரு புத்தி இழந்த  செயல் என்று கருதி

இந்த சூழ்நிலையில் நாம் ஒரு இடத்திற்கு செல்ல முடிவெடுத்து விட்டால் நமது பயண தூரம் எவ்வளவு, நமது டூவீலர் எவ்வளவு மைலேஜ் தரும், அதற்கு எவ்வளவு எரிபொருள் அதாவது பெட்ரோல் போட வேண்டும்.

என்று தெரிந்த நம்மில் பலபேர் ஒரு தொழிலைத் தொடங்கும் பொழுது விற்பனைக்கோ  அல்லது உற்பத்தி கோ எவ்வளவு சரக்கு போதுமானதாக இருக்கும். என்பதை ஆராய்ந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதன் விளைவாக தேவையற்ற இடத்தில் அதிகப்படியான சரக்கும் தேவைப்படும் இடத்தில் சரக்கு இல்லாமலும் அவரவர் தொழிலில் நட்டத்தை சந்திக்க சந்திக்கின்றனர்.

நீங்கள் வெற்றிபெற பாதையில் இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் வணிகத்தின் சரக்கு இருப்பை தவறாமல் மதிப்பீடு செய்வது முக்கியம்.  உங்கள் வணிகத்தின் மிகவும் முக்கிய பகுதியாக சரக்கு மேலாண்மை உள்ளது.

ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவதற்கு விற்பனைப் பொருள்களின் மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து ஒவ்வொரு தொழில் முனைவோரும் செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.

இவ்வாறாக இந்த பதிவில்.

01. தொழிலில் சரக்கிருப்பு மேலாண்மை என்றால் என்ன?

02. சரக்கிருப்பு மேலாண்மையின் வகைகள் என்ன?

03. சரக்கு இருப்பு மேலாண்மையின் நன்மை தீமைகள் என்ன?

04. சரக்கு இருப்பு மேலாண்மை எந்த வகை தொழில்களுக்கு ஏற்றதாக இருக்கும்?

05. சரக்கு இருப்பு மேலாண்மையின் முக்கியத்துவம் என்ன?

06. சரக்கு இருப்பு மேலாண்மையில் பயன்படுத்தப்படும் மென்பொருளின் பயன் என்ன?

07. ஒரு வளர்ந்துவரும் தொழிலில் சரக்கிருப்பு மேலாண்மை எவ்வாறு கையாள்வது?

என்பது போன்ற பல விளக்கங்களை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இதில் நாம்முதலாவதாக பார்க்க இருப்பது.

01. தொழிலில் சரக்கிருப்பு மேலாண்மை என்றால் என்ன?

சரக்கு மேலாண்மை என்பது சரியான தயாரிப்புகளை சரியான நேரத்தில், சரியான நேரத்தில் விற்பனைக்கு வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இதனை திறம்பட மேலாண்மை செய்யும்போது, ​​வணிகங்கள் விற்பனையை அதிகரிக்கும்.

02. சரக்கிருப்பு மேலாண்மையின் வகைகள் என்ன?

பொதுவாக சரக்கு இருப்பு மேலாண்மை

02A. வியாபார தொழிலுக்கான சரக்கு இருப்பு மேலாண்மை.
02B. உற்பத்தி தொழிலுக்கான சரக்கிருப்பு மேலாண்மை.
02C. இடைத்தரகு தொழிலுக்கான சரக்கு இருப்பு மேலாண்மை.

என பல வகைகளாக அவரவர் நடத்திவரும் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்து பார்க்கப்படுகின்றன.

இதில்
02D.FIFO என்னும் முறை முதலில் வாங்கப்பட்ட பொருட்கள் முதலில் விற்கப்பட வேண்டும் என்ற கூற்றின் அடிப்படையில் செயல்படுகிறது.
உதாரணத்துக்காக உணவுப்பொருள் சம்பந்தமான விற்பனை அல்லது உற்பத்தியில் இருப்பவர்களுக்கு இம்முறை பயனுள்ளதாக இருக்கும்.

02E.LIFO என்னும் முறை இறுதியில் வாங்கப்பட்ட பொருட்கள் முதலில் விற்கப்பட வேண்டும் என்ற கூற்றின் அடிப்படையில் செயல்படுகிறது.
உதாரணத்துக்கு அளிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு கூடும் நிலையில் இருக்கும் தொழிலுக்கு இந்த முறை ஏற்றதாக இருக்கும்.

03. சரக்கு இருப்பு மேலாண்மையின் நன்மை தீமைகள் என்ன?

உங்கள் சரக்குகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் நீங்கள் சரியான தயாரிப்புகளை சரியான அளவில் வைத்திருக்கலாம் மற்றும் தயாரிப்புகள் கையிருப்பில்லாமல் இருப்பதையும், அதிகப்படியான பங்குகளில் நிதி பிணைக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.  கெட்டுப்போன அல்லது வழக்கற்றுப் போவதைத் தவிர்ப்பதற்காக உங்கள் தயாரிப்புகள் சரியான நேரத்தில் விற்கப்படுவதையும், அல்லது ஒரு கிடங்கிலோ அல்லது பங்கு அறையிலோ இடத்தை எடுத்துக் கொள்ளும் பங்குகளுக்கு அதிக பணம் செலவழிப்பதை உறுதிசெய்யலாம்

04. சரக்கு இருப்பு மேலாண்மை எந்த வகை தொழில்களுக்கு ஏற்றதாக இருக்கும்?

தொழில் உள்ள சரக்குகளின் மொத்த மதிப்பு என்ன?

அவற்றை விற்பதன் மூலம் நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

கிடைக்கும் லாபம் லாபத்தில் இருந்து வட்டியானது எவ்வளவு பறிக்கப்படுகிறது?

என  நடத்திவரும் தொழில் இருக்கும் விற்பனை பொருட்களையோ அல்லது  உற்பத்தி பொருட்களையோ சராசரி சரிவர நினைவில் வைத்து கொள்ள முடியாத முடியாத தொழில்கள் அனைத்திற்கும் சரக்கு மேலாண்மை மிக அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

05. சரக்கு இருப்பு மேலாண்மையின் முக்கியத்துவம் என்ன?

05A. நிறுவனத்தின் நிதி நிலையை அடிக்கடி கணக்கிடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.

05B. நடத்திவரும் தொழில் லாபகரமாக அமைகிறதா அல்லது நட்டத்தில் இயங்குகிறதா என்பதை கண்காணிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

05C. வங்கி கடன் பெற்று நடைபெற்று வரும் தொழில்கள் அனைத்திற்கும் வங்கியாளர் கேட்கும் சரக்கு இருப்பு மேலாண்மை பற்றிய தயாரிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது.

05D. புதிதாக கடன் கொடுக்க முன்வரும் வங்கிகளுக்கு இந்த சரக்கு இருப்பு மேலாண்மை அதிகமாக இருக்கிறது.

05E. நடத்திவரும் தொழில் விற்பனையை அதிகரிக்கவும் போதிய அளவு கொள்முதல் செய்வதற்கும் இந்த சரக்கு இருப்பு மேன்மை உதவிகரமாக இருக்கிறது.

05F. விற்பனையை அதிகரிப்பதற்கு அதிகரிப்பதற்காக உருவாக்கப்படும் விலைப்பட்டியல் மற்றும் விற்பனை கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு இந்த சரக்கு இருப்பு மேலாண்மை உதவிகரமாக இருக்கிறது.

06. சரக்கு இருப்பு மேலாண்மையில் பயன்படுத்தப்படும் மென்பொருளின் பயன் என்ன?

நல்ல சரக்கு மேலாண்மை மென்பொருளின் நன்மைகள் பின்வருமாறு:

செலவுகளைக் குறைக்கவும், பணப்புழக்கத்தை மேம்படுத்தவும்,
உங்கள் வணிகத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும்,

தேவையை தேவைப்படும் சரக்குகளை உண்மை உண்மையான நேரத்தில் தெரியப்படுத்தவும்,  உதவிகரமாக இருப்பது இவ்வகை மென்பொருள்.

தயாரிப்பு மற்றும் உற்பத்தி பற்றாக்குறையைத் தடுக்கவும்,
அதிகப்படியான அளவில் மூலப்பொருட்கள் வீணாவதை தடுக்கவும் உதவிகரமாக இருக்கிறது.

  விலைமதிப்பற்ற பணியாளர் நேரத்தை மேம்படுத்தவும், கிடங்குகளில் சரக்குகளைக் கண்காணிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

   உங்கள் தொழிலில் திட்டமிடப்பட்ட விற்பனை கணக்கீடுகளை முறைப்படுத்தவும் விற்பனை புள்ளிவிவரங்கள்  அடிப்படையில் அடுத்த கொலையும் விற்பனையும் கணக்கிட்டு செயல்பட உதவிகரமாக இருக்கிறது.

07. ஒரு வளர்ந்துவரும் தொழிலில் சரக்கிருப்பு மேலாண்மை எவ்வாறு கையாள்வது?

வரும் தொழிலில் சரக்கு இருப்பு  மேலாண்மை எவ்வாறு கையாள்வது என்பதை அதிகப்படியான விளக்கங்களுடன் மேலே கூறி உள்ளேன். தொழில் முனைவோர்களுக்கு இது போதுமானதாக இருப்பதில்லை. இதற்கென தனியான மேலாண்மை பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. அதனை தொழில் முனைவோர் மற்றும் தொழில் நடத்துவோர் பயன்படுத்தி கற்றுக்கொண்டு நடத்திவரும் தொழிலை சிறப்பாக மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

மேற்சொன்ன  சரக்கு இருப்பு மேலாண்மை மற்றும் அது தொடர்பான பல விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?