What is the status of businesses after Corona ?கொரோனாவிற்கு பின் தொழில்கள் எவ்வாறு இருக்கும்?

Story 57.What is the status of businesses after Corona ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் கொரோனாவிற்கு பின் தொழில்கள் எவ்வாறு இருக்கும்?   என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

வழக்கம்போல் நான் சொல்ல வந்த  விளக்கத்தை இது கதையுடன் கூடிய உதாரணத்துடன் சொல்ல விரும்புகிறேன் வாருங்கள் கதைக்குள்லும்  பதிவுக்குள்ளும்  போகலாம்.

பல்வேறு ஆண்டுகாலமாக உலகில் பலவித இயற்கை பேரிடர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால்  இவ்வகையான பேரிடர்கள் அதிகம் காலம் இடைவெளி எடுத்து வருவதினால் இத்தகைய பேரிடர்களில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள போதிய பரிச்சயம் இல்லாமல் இருக்கின்றனர்.

இதன் விளைவாக பட்ஜெட்டின் அடிப்படையில் மாதத்தை தள்ளி வந்தவர்களுக்கும்,  கடன் வாங்கி அதனை மாதாமாதம்  அடைத்து வரும் அடித்தட்டு மக்களுக்கும், சிறு தொழில் முனைவோர் களுக்கும், குறுந் தொழில் செய்பவர்களுக்கும் இது ஏற்றதாக அமைவதில்லை.

ஒரு சில பேரிடர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில் செய்யும் மக்களை பாதிக்கும் வகையிலும், ஒருசில பேரிடர்கள் பாதி அளவிலான தொழில் செய்யும் மக்களை பாதிக்கும் வகையிலும், ஒரு சில பேரிடர்கள் அனைத்து தொழில்களையும் முடக்கிப் போடுவதாகவும் இருக்கின்றன.

இத்தகைய பேரிடர் காலங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள பெரும் தொழில் நிறுவனங்கள் இதற்கான சேமிப்பை தொகை காலத்திலிருந்தே செய்து வருகின்றனர். குறிப்பிடும் அளவிற்கு சேமித்து இருப்பதினால் இந்த பேரிடர் காலங்களில் செலவுகளை சமாளிப்பதே இவர்களுக்கு சற்று எளிமையாக இருக்கிறது.

ஆனால் சிறிய அளவில் தொழில் செய்து மக்கள் அன்றாட வருமானத்தின் அடிப்படையில் செயல்படுவதையும் காரணமாக அவர்களால் இத்தகைய பேரிடர் காலங்களில் தொழிலை தொடர்ந்து நடத்தவும் சமாளிக்கவும்  முடியாமல் போகிறது.

தற்போது வந்துள்ள காரோண நோய்த்தொற்று பரவலானது அனைத்து தொழில்களையும் முழுவதுமாக முடக்கிப் போட்டு உள்ளது.

ஏற்கனவே வந்த கன மழையில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே சில கற்களின் இடுக்கில் மாட்டி கொண்டு இருக்கும் தொழில்களை போலவும், தண்ணீர் குழாயின் இடுக்கில் மாட்டி கொண்டுள்ள பாசியை போல  சிக்கித் தவிக்கும் தொழில்களும், இந்த குர்ஆனை பேரிடர் மாபெரும் வெள்ளம் போல் வந்து அனைத்து தொழில்களையும் அலசி தூர்வாரி சென்றுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பின் வந்த தொழிற்புரட்சியின் காரணமாகவே தொழில் நிறுவனங்கள் அதிக அளவு வளர்ந்து  வந்து இருக்கின்றன. அதுபோலவேஇந்த குர்ஆனை நோய்த் சோற்றுக்குப் இன்னும் தொழில் நிறுவனங்கள் மாபெரும் வளர்ச்சி அடையும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் தன் கூடவே பயணித்த பல போட்டியாளர்களை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கார் அது எடுத்த வேகத்தின் காரணமாக அதிகப்படியான எரிபொருட்களை செலவிட்டு சென்றிருக்கும் அவை அனைத்தும் எதிரே வந்த ஒரு வேகத்தடையும் காரணமாக  வீணாகிவிடும் அதுமட்டுமில்லாமல் தனக்கு பின் வந்த அனைத்து கார்களும் அந்த வேக தடைக்கு இணையாக வந்து கூடவே நிற்கின்ற சூழ்நிலையும் நாம் பார்க்க முடிகின்றது.

அந்த வேகத்தடையை கடந்து பயணிக்க தொடங்க தயாராக நிலையில் உள்ள அனைத்து கார்களும் எவ்வளவு எரிபொருளை தொடக்கத்தில் எரிக்க வேண்டும் எரிக்க வேண்டும். மேலும் காரை சரியான திசையில் ஓட்டுவதற்கு ஓட்டுனரின் திறமையும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

இதே போல தான் பல தொழில்களிலும் பல போட்டியாளர்கள் கொரோன என்ற நோய்த்தொற்று வேகக்கட்டுப்பாட்டு கருவியாக செயல்பட்டிருக்கிறது.

ஒருவகையில் இது அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், கொரோன காலகட்டத்திற்கு பின் அனைத்து தொழிலுக்கும் சமமான பொதுவான வளர்ச்சியைக் கொடுக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக.
01. இயற்கை பேரிடர் என்றால் என்ன?

02. இயற்கை பேரிடர் மக்களை எவ்வாறு பாதிக்கிறது?

03. இயற்கை பேரிடர் காலங்களில் வளரும், வீழ்ச்சி அடையும் தொழில்கள் என்னென்ன?

04. இயற்கை பேரிடர் தொழில்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?

05. இயற்கை பேரிடர் கானா தொழிலில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை என்ன?

06. பேரிடர் காலங்களில் தொழிலை எவ்வாறு மேலாண்மை செய்வது?

போன்றவற்றை விரிவாக பார்க்க இருக்கிறோம்.


இதில்  நாம்  முதலாவதாக பார்க்க இருப்பது.

01. இயற்கை பேரிடர் என்றால் என்ன?

மக்களின் அன்றாட வாழ்வுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கும், பொருட்களை வாங்க தேவைப்படும் பணத்தை ஈட்டுவதில் தடையாகவும், மனிதன் வாழ்வதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த ஒரு  சீற்றத்தையும் நாம் இயற்கை பேரிடர் என்று கூறலாம்.

02. இயற்கை பேரிடர் மக்களை எவ்வாறு பாதிக்கிறது?

ஒவ்வொரு இயற்கைப் பேரிடரும் அதன் தன்மைக்கு ஏற்றாற் போல் மக்களை பாதிக்க செய்கிறது.

ஒரு பெயருக்கு ஏற்றார் போல அரசாங்கம் மக்களிடையே பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இதுபோல ''கரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்த படுகின்ற ஊரடங்கால் வெவ்வேறு விதமான பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகின்றன.

நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களைப் பொறுத்தவரையில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதுபோலவே வீட்டில் இருந்தே வேலை வாங்கும் பழக்கம் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது..

சம்பள உயர்வு, போனஸ் போன்றவை ஊழியர்ளுக்கு இந்த ஆண்டு இருக்காது.

கிடைக்கும் சம்பளத்தை வைத்து வாழ வேண்டிய கட்டாயம் ஊழியர்களுக்கு ஏற்படும்.

பெரிய அளவில் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் பழக்கம் குறைந்துவிடும்.  குறிப்பாக குறைந்த சம்பளம் பெறுவோர் ஆடம்பரச் செலவை முழுமையாகக் குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

இதுமட்டுமல்லாமல் ஊழியர்கள் உடல்நல விஷயத்தில் அதிக கவனம் கொண்டு இப்போதே யோகா, உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது.

03. இயற்கை பேரிடர் காலங்களில் வளரும், வீழ்ச்சி அடையும் தொழில்கள் என்னென்ன?

பேரிடர் காலங்களில் தொழில்களைப் பொறுத்தவரையில், ஐடி உலகளாவிய நிலையைப் பொறுத்து அதன் போக்கு இருக்கும்.  சிறிய ஐடி நிறுவனங்கள் அதிகமான பாதிப்பைச் சந்திக்கக்கூடும்.

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரையில் தற்காலிக வளர்ச்சி ஏற்படலாம். குறிப்பாக இருசக்கர வாகனங்கள், சிறிய வகை கார்கள் அதிகமாக விற்பனையாகலாம்.

பொதுப் போக்குவரத்து சரியான முறையில் இல்லாததாலும், கரோனா பரவும் பீதி இருப்பதாலும் தனிப்பட்ட வாகனங்களில் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவர். இதனால் கரோனாவுக்குப் பிறகு இதுபோன்ற வாகனங்கள் விற்பனை அதிகரிக்கலாம்.

இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும். ஆன்லைனில் கோர்ஸ் படிப்பது அதிகரிப்பதால் அதற்கு ஏற்றவகையில் மொபைல் போன், கேட்ஜட்டுகள் விற்பனையும் அதிகரிக்கலாம். இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரிக்கலாம்.

சுகாதாரம், உடல்நலம் சார்ந்த மருந்துகள் விற்பனை, விநியோகம், சேவைத் துறைகள் சார்ந்த வர்த்தகம் அதிகரிக்கும்.

அதுபோலவே பேக்கிங் முறையில் பல மாற்றங்கள் வரும். உடல்நலம் சார்ந்த எண்ணம் அதிகரிப்பதால் பொருட்களை பேக்கிங் செய்வதில் முறைகள் மாறலாம். அது சார்ந்து புதிய தொழில்கள் உருவாகக்கூடும்.

மக்கள முதலீடு செய்யும் துறை ரியல் எஸ்டேட் என்பதால் தற்போது அதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் குறையும். வீடுகள், நிலங்கள் விற்பனை குறையும்.

04. இயற்கை பேரிடர் தொழில்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?

இயற்கை பேரிடர் ஆன  கரோனா வைரஸ் பெருமளவு பரவி வரும் நிலையில் அதற்கு எதிரான போராட்டத்தில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பெரிய அளவில் பொருளாதாரப் பாதிப்புகள்  உருவாகியுள்ளது.

ஒரு சில தொழில்கள் இயற்கை பேரிடர் ஆன கொரோன  வருவதற்கு முன் உள்ள உற்பத்தி பொருட்களை மட்டுமே இன்றளவும் சந்தை இட்டு வருகின்றனர்.

கொரோன நோய்த்தொற்று பரவலுக்கு பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும் இன்றளவும் ஒரு சிலருக்கு பொருட்களுக்கான உற்பத்தி ஆனது துவங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

குரானா மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால் கரோனாவுக்குப் பிறகு என்ன சூழல் ஏற்படும், தனிநபர்கள், நிறுவனங்கள், அரசுக்கு உள்ள நெருக்கடி, போன்றவை நடக்கும் பொழுதுதான் நாம் அனுமானிக்க முடியும்.

05. இயற்கை பேரிடர் கானா தொழிலில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை என்ன?

சமீபகாலமாக பல இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருவதை  காணமுடிகிறது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று  சில நிறுவனங்கள் யோசித்து  அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

05A.அவசர கால்களுக்கான சேமிப்பை எவ்வாறு தொடங்குவது?
05B.இயற்கை பேரிடர் காலங்களில் தொழிலை எவ்வாறு நடத்துவது?
05C. பேரிடர் காலங்களில் வளர்ச்சி அடையும் தொழில்கள் மற்றும் வீழ்ச்சி அடையும் தொழில்கள் என்ன?
05D. பேரிடர் காலங்களில் எந்த அளவிற்கு கடன் வாங்குவது எந்த அளவிற்கு கடன் கொடுப்பது?
05E. பேரில் காலங்களுக் காண உற்பத்தியை எவ்வாறு கண்டுபிடிப்பது?

என்பது போன்ற பல ஆராய்ச்சிகளில் நிறுவனங்கள் இப்போதே ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

06. பேரிடர் காலங்களில் தொழிலை எவ்வாறு மேலாண்மை செய்வது?

பேரிடர் காலங்களில் தொழிலை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை என்பதை ஒரு சிறிய விளக்கத்துடன் இங்கே கூற இயலாது. இதற்கென தனியான மேலாண்மை பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. அதனை தொழில் முனைவோர் மற்றும் தொழில் நடத்துவோர் பயன்படுத்தி கற்றுக்கொண்டு நடத்திவரும் தொழிலை சிறப்பாக மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

மேற்சொன்ன  பலவகைப்பட்ட இயற்கைப் பேரிடர் அதற்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?