How to create Business Goals ? நிறுவனங்களின் இலக்கை எவ்வாறு உருவாக்குவது
Story 8. How to create Business Goals ? . தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்தப் பதிவில் ஒரு தொழில் அல்லது நிறுவனங்களின் இலக்கை எவ்வாறு உருவாக்குவது என்பதை விரிவாகப் பார்க்கப்போகிறோம். புதிதாக தொழில் தொடங்கியவர்கள் இடம் மற்ற நபர்கள் வந்து டேய் தொழில் புதுசா தொழில் தொடங்க நீயே என்ன ஆச்சு? எப்படி போகுது? என்று கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அதற்கு அவர்கள் நல்லா போயிட்டு இருக்கு, சூப்பரா போய்ட்டு இருக்கு, என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு கஷ்டமா டைட்டா இருக்கும்னு சொல்வாங்க. சிலர் எங்க உண்மையை சொன்னால் பிறர் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்து சிரிச்சிட்டே நல்லா போயிட்டு இருக்குன்னு சொல்லிட்டு போவாங்க. அப்படி இருக்கும் போது அவனுக்குள் ஏதோ ஒ...